விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 34 மற்றும் 35 வது வார்டுகளில் நேற்று (நவம்பர் 8) நள்ளிரவு பெய்த கன மழையால் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை சுருக்கியதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து இன்னலுக்கு ஆளாகினர். போதிய அளவிலான கழிவுநீர் கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.