விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கான கடைசி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உளுந்து, பாசிப்பயறுக்கு நவம்பர் 15, 2025 வரையிலும், மக்காச்சோளம், கம்பு, துவரை, பருத்திக்கு நவம்பர் 30, 2025 வரையிலும், நிலக்கடலை, சூரியகாந்திக்கு டிசம்பர் 30, 2025 வரையிலும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விண்ணப்பத்துடன் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி இரசீது பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.