பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டம் மூன்றாவது இடம்

விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் அதிக தேர்ச்சி விழுக்காடு பெற்று (96. 22 சதவீதம்) தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 2023ல் நடைபெற்ற இடைநிலைப் பொதுத் தேர்வுகள் விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 358 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 116 தேர்வு மையங்களில் 12, 307 மாணவர்களும், 12, 612 மாணவியர்களும் என மொத்தம் 24, 919 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 19. 05. 2023 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் 11, 662 மாணவர்களும், 12, 315 மாணவியர்களும் என மொத்தம் 23, 977 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் அதிக தேர்ச்சி விழுக்காடு பெற்று (96. 22 சதவீதம்) தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி