மதுபான கடைகளை மூடக்கோரி மக்கள் நீதி மையம் சார்பில் மனு

தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், விருதுநகரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 13 நாட்கள் ஆகியும் ஒரு மதுபானக் கடையும் அகற்றப்படவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் தூரத்தில் உள்ள கடைகளை உடனடியாக அகற்றக் கோரி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி