விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக அச்சங்கத்தின் மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 129 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்குக் கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், கடந்த 2021-ல் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது போல் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகத்தை அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.