இதில் அந்த அறையில் பணி செய்து கொண்டிருந்த கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (58), கண்டியணேந்தல் கருப்பையா (35) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் மூன்று தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்த காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் மேலும் வெடிவிபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.
விபத்து குறித்து காரியாபட்டி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் உடலுக்கு மலர்மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தனர்.