முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 2710 பயனாளர்கள் கலந்து கொண்டனர், அதில் 1978 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் முகாம்கள் நடைபெற இருக்கிறது.