அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூரின் 51வது பிறந்தநாள் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வடக்கு வட்டாரத்தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரதீப் குமார் தலைமையில், கிழக்கு மாவட்டத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ரத்ததானம் வழங்கினர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.