விருதுநகர்: அகில பாரத மூத்த குடிமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில், தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தையே தொடர வேண்டும், குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9000 வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டம் - கட்டணமில்லா மருத்துவத்தை உறுதி செய்து வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை மூன்று லட்சமாக உயர்த்த வேண்டும், பென்ஷனர்கள் மரணமடைந்தால் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஈமச்சடங்குகளுக்கு ஒரு லட்சம் வழங்க அனுமதி தர வேண்டும், 20 ஆண்டு பணிக்கு முழு பென்ஷன் தர வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 30க்கும் மேற்பட்ட பென்ஷனர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி