சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குளிக்க சென்றவர் பலி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சண்முகாபுரத்தை சேர்ந்த வேல்முருகன் (37) என்பவர் விவசாய கிணற்றில் இன்று காலையில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கிய உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி