அப்போது அதே நரிக்குடி பகுதியிலிருந்து இராமநாதபுரத்திற்கு கோழிகளை ஏற்றிச்சென்ற இராமநாதபுரம் பிரபு (30) ஓட்டி வந்த மற்றொரு ஈச்சர் லாரியொன்று அதிவேகமாக வந்து நின்றுகொண்டிருந்த ஈச்சர் லாரி பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுநீர் கழிக்கச் சென்ற ஈச்சர் லாரி டிரைவரான தென்காசி சிவகிரியைச் சேர்ந்த மணிகண்டனும், ஈச்சர் லாரி மீது மோதிய மற்றொரு ஈச்சர் லாரி டிரைவரான பிரபு என்பவரும் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் விபத்தில் சிக்கி காயமடைந்த இருவரையும் மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த தென்காசி சிவகிரியைச் சேர்ந்த மணிகண்டன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.