திருச்சுழி: பாம்பு கடித்து இளம்பெண் பலி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தளக்குளம் சார்ந்த பிரியா என்ற 18 வயது இளம் பெண் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்த பொழுது கட்டுவிரியான் பாம்பு கடித்துள்ளது. இதை அடுத்து அங்கிருந்தவர்கள் பிரியாவை உடனடியாக சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி பிரியா பலியானார். இந்த சம்பவம் குறித்து திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி