இத்திட்டத்தில் சேர விடுபட்ட விவசாயிகள் பி.எம்.கிஸான் வலைதளத்தில் நில உடமைகளை பதிவேற்றம் செய்த அடையாள எண்ணுடன் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், நமது மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம்.கிஸான் 19வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில் 16493 விவசாயிகள் நில உடமை பதிவுகளை மேற்கொள்ளவில்லை. 20வது தவணை தடையின்றி பெற நில உடைமை பதிவுகளை பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நிலஆவணங்களை பி.எம்.கிஸான் திட்ட முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொள்கிறார்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?