விருதுநகர்: நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராமஊராட்சிகளில் உலகதண்ணீர் தினமான 22.03.2025 அன்று நடைபெறவிருந்த கிராமசபைக்கூட்டம் நிர்வாககாரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது - மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராமசபைக்கூட்டமானது 23.03.2025 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. உலகதண்ணீர் தினத்தின் சுருக்கொருளினைப்பற்றி விவாதித்தல். வான்தரும் மழைநீரினை சேகரித்தல். சிக்கனமாகதண்ணீரைப் பயன்படுத்துதல். உடைந்தகுழாய்களை சரிசெய்து நீர்வீணாகாமல் பாதுகாத்தல். மறுசுழற்சிக்குஉட்படுத்துதல். 

நிலத்தடிநீரை செறிவூட்டுதல். நீரின்தூய்மையைப் பாதுகாத்தல் மற்றும் நீர்மாசுக்கட்டுப்பாட்டைத் தடுத்தல். மரம்வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொருமரம் வளர்த்தல். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றிபுனரமைத்தல். நீர்நிலைகளின் தண்ணீர்சேகரமாகவுரியகால்வாய்களைத் தூர்வாரிபுனரமைத்தல். நீரின்முக்கியத்துவத்தைக் குழந்தைகளிடம் எடுத்துக்கூறுதல். கிராமஊராட்சிநிர்வாகம் மற்றும் பொதுநிதிசெலவினம் குறித்து விவாதித்தல். கிராமஊராட்சியின் தணிக்கைஅறிக்கைகுறித்து விவாதித்தல். சுத்தமானகுடிநீர்விநியோகத்தினை உறுதிசெய்வதுகுறித்து கிராமசபைக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாதுகலந்துகொண்டு பயனடையவேண்டுமென மாவட்டஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி