விருதுநகர்: உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை துணை மருத்துவ கண்காணிப்பாளர் அன்புவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்த பேரணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்பித்து தலைமை தபால் நிலையம், பாண்டியன் நகர் தேவர் சிலை வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடிவடைந்தது.

தொடர்புடைய செய்தி