விருதுநகர்: பெண்களுக்கு மானியத்துடன் கடன் உதவி

பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க 'தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெண்கள் ரூ. 10 லட்சம் வரை 25% மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம். 18 முதல் 55 வயதுடைய பெண்கள், புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியல் ஆகியவற்றுடன் www.msmeonline.tn.gov.in/TWEES என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி