விருதுநகர்: தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் காயம்

விருதுநகர் மாவட்டம் சித்தலகுண்டு பகுதியில், மதுரையிலிருந்து கமுதிக்குச் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்த பாப்பா என்ற பெண், பேருந்திலிருந்து இறங்கும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி