விருதுநகர்: விஏஓ அலுவலர்கள் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. கண்காணிப்புக்குழுக் கூட்டமானது கிராமப்புற பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அந்தந்த கிராமங்களில் நடக்க வேண்டும். ஒரு கிராமத்தில் எட்டு வகையான குழுக்கள் இருந்தன. அந்த குழுக்கள் எல்லாம் மாதந்தோறும் இணைந்து ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும். அப்பொழுது தான் கிராமங்களில் அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதற்காக அதிகமான இடங்களில் இந்த குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நிறைய கிராமங்களில் இந்த குழுக்களின் மூலமாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒரு சில சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த குழுவில் முறையாக கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தாத பல கிராமங்களும் இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி