விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்குரோட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண கணபதி, ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ சந்தன கருப்பசாமி திருக்கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, கோவில் வளாகம் முழுவதும் மின் அலங்காரம், தோரணங்கள் மற்றும் மலர் அலங்காரங்களால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. காலை வேளையில் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் நடைபெற்றது. இதற்காக சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு, புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து வேதியர்கள் யாக பூஜைகளை நடத்தினர். இந்த திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது.