விருதுநகர்: சாமியாடி பணம் திருடிய 2 இளைஞர்கள் கைது

காரியாபட்டி அருகே சின்ன புளியம்பட்டி கிராமத்தில், பிரபு என்பவரின் வீட்டிற்கு வந்த இரு இளைஞர்கள், சாமி வந்துள்ளது என்று கூறி திருநீறு, தீர்த்தம் கொடுத்துள்ளனர். பின்னர், மாயாண்டி சாமி வந்துள்ளதாக கூறி, பிரபுவிடம் இருந்து ₹500 காணிக்கை பெற்றுள்ளனர். சிறிது நேரத்தில் பர்ஸ் காணாமல் போனதை அறிந்த பிரபு, துரத்திச் சென்று இளைஞர்களைப் பிடித்துள்ளார். அவர்களிடம் இருந்து ₹17,000 பணத்துடன் பர்ஸ் மீட்கப்பட்டு, இளைஞர்கள் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி