விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி விலக்கு பகுதியில் திருச்சுழி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நின்ற இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை திருச்சுழி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெருஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வீரசூரன் (24), அருண்குமார் (24) என்பதும் சட்ட விரோதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருச்சுழி போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு பைக் மற்றும் சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வீரசூரன், அருண்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அதன் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.