விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்தவர் மாரியம்மாள் வயது 55. இவர் வில்லிபத்திரி ரயில்வே கேட்டு அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணசாமி என்பவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து மாரியம்மாள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் மாரியம்மாள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த விபத்து குறித்து மாரியம்மாளின் கணவர் கருப்பசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.