காரியாபட்டி அருகே கார் விபத்து: இருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் நேற்று (மே 22) நடைபெற்ற சாலை விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரியாபட்டி புறவழிச்சாலையில் சென்றபோது திடீரென காரின் டயர்  வெடித்து விபத்து ஏற்பட்டது இதில் இருவர் காயம் அடைந்தனர்

தொடர்புடைய செய்தி