விருதுநகர்: மோதி உருண்டோடிய கார்கள்

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி வளையங்குளம் பிரிவில் தூத்துக்குடியை சேர்ந்த செல்வகண்ணன் என்பவர் காரில் சென்று கொண்டிருந்ததாகவும், அதே சாலையில் திருச்சுழியை சேர்ந்த நேதாஜி என்பவர் மற்றொரு காரில் அதிவேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் செல்வகண்ணன் என்பவரின் கார் சேதமடைந்ததாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி செல்வகண்ணன் மல்லாங்கினார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் மல்லாங்கினார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி