விருதுநகர்: முன்னாள் ராணுவ வீரர் கொலை.. 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி(62). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மலர்விழி(54) 10 துரைப்பாண்டி அழகிய நல்லூர் கிராமத்திற்குச் செல்வதாக கூறி சென்றுள்ளார். துரைப்பாண்டிக்கு அவரது மனைவி பலமுறை போன் செய்தும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மலர்விழி குன்றக்குடி காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி தனது கணவரைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார். 

விசாரணையில் துரைப்பாண்டி வங்கிக் கணக்கில் இருந்து காரியாபட்டி ராம்குமார்(26) என்பவரது வங்கிக் கணக்கிற்கு அதிக அளவு பணம் அனுப்பியது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் ராம்குமார் காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி கிராமத்தில் தார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். பாண்டி(54) என்பவரும் அங்கு பணிபுரிந்து வந்துள்ளார். பாண்டி மற்றும் ராம்குமார் இருவரும் துரைப்பாண்டியிடம் கார் வாங்கித்தந்து ஏமாற்றியுள்ளனர். ரூ.2.40 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்கி அதை துரைப்பாண்டிக்கு ரூ.3.40 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.

சில நாட்களில் கார் பழுதானதால் துரைப்பாண்டி கார் கம்பெனிக்கு சென்றபோது அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டி மற்றும் ராம்குமாரிடம் அவர் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டி மற்றும் ராம்குமார் இருவரும் சேர்ந்து துரைப்பாண்டியை அடித்து கொலை செய்து தார் ஆலையில் போட்டு எரித்துள்ளனர். 40 நாட்களுக்கு முன் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி