விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, பொதுமக்களை வாளுடன் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக விக்னேஷ் (32) மற்றும் பிரசாந்த் (27) ஆகிய இரு இளைஞர்களை திருச்சுழி போலீசார் கைது செய்தனர். தபசு மண்டபம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்றிருந்த இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றதில், அவர்கள் தனியாக வருவோரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் ஆயுதம் வைத்திருந்தது தெரியவந்தது.