விருதுநகர்: மதுபான கடை ஊழியர்களை தாக்கி பணம் திருட்டு.. மூவர் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தொட்டியாங்குளம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் இருந்து ரூ. 1,09,500 பணத்தை மிரட்டிப் பறித்த மூன்று மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சின்னராஜ் மற்றும் சரவணன் என்ற ஊழியர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இச்சம்பவம் தொடர்பாக, முத்துமணி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி