விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார். திருச்சுழி தொகுதி உருவானதில் இருந்தே அங்கு இவர் மட்டுமே வெற்றி பெற்று வருகிறார். திருச்சுழியில் 4வது முறையாக போட்டியிடும் அவரை அதிமுக, நாதக மற்றும் தவெக வேட்பாளர்கள் வீழ்த்துவது மிக மிக கடினம் என கூறப்படுகிறது. ஏனெனில் அவரது வாக்கு வித்தியாசம் ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து கொண்டே செல்கிறது.