விருதுநகர் மாவட்டத்தில் 47 விடுதிகள் உள்ளன; மாணவர்கள் பயன்பெறலாம்

தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர்  சீர்மரபினர் நலத்துறையில் மாணவ மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 24 மாணவர்களுக்கானது மற்றும் 18 மாணவியர்களுக்கானது. கல்லூரி விடுதிகளில் 3 மாணவர்களுக்கானது மற்றும் 2 மாணவியர்களுக்கானது என மொத்தம் 47 இடம் உள்ளது. 

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ  மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர்  மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ  மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ  மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ  மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி