அவரது வீட்டிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டார். அவர் கூறியது போல மிகவும் சிதிலமடைந்த வீட்டில் போதிய அடிப்படை வசதிகளின்றி குழந்தைகள், முதியவர் என 5க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்தனர். இதையடுத்து அவருக்கு கலைஞர் கனவுத் திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். இந்நிலையில் இதனை உறுதிசெய்யும் விதமாக ராணிக்கு அவர் வசித்துவரும் வீட்டின் பட்டா மாறுதல் ஆணையினை முதற்கட்டமாக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வழங்கினார். தொடர்ந்து கலைஞர் கனவுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு