நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை துவங்கி வைத்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமாக இருந்த அடையாள அட்டை பெறும் முறையை எளிதாக்கும் வகையில், இருப்பிடத்திற்கு அருகிலேயே நடத்தப்பட்ட இந்த முகாம் மூலம் பயனாளிகள் பரிசோதனை செய்து, உடனடியாக அடையாள அட்டைகளைப் பெற்று பயனடைந்தனர். பயனாளிகள் தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி