சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சார்ந்த செம்பனூர் கிராமத்தில் வசித்து வந்த ராகுல் தர்ஷன் வயது 17 மருத்துவ கணவுடன் மதுரையில் நீட் பயிற்சி பெற்று சமீபத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியாகுவதற்கு முன்னதாகவே காரியாபட்டி பெரியார் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்த அந்த இளைஞர் நேற்று தேர்வு முடிவு வெளியானதும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காரியாபட்டி காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.