விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி சுற்றித் திரியும் தெருநாய்களால் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். எந்தவித அச்சமும் இன்றி நோயாளிகள் செல்லும் பாதைகளில் நாய்கள் சுற்றித் திரிவதால், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.