விருதுநகர்: நேற்று (நவ.19) காரியாபட்டி அருகே தோப்பூர், கழுவனச்சேரி கிராமங்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட ஏழு பேர் தெருநாய் கடித்ததில் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட 7 பேரும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடியால் ரேபீஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.