விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புலியாண்டார் கோட்டை கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாரநாடு கருப்பணசாமி கோயிலின் மாசிக்களரி உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் தீச்சட்டி, இருபத்தியொரு கண் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.