மேலும், ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இந்த நிலையில் திருவிழாவின் 2ம் நாளான இன்று ஸ்ரீ திருமேனிநாதர் சுவாமி மற்றும் அம்பாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி மற்றும் அம்மனைத் தரிசனம் செய்தனர். இதனையடுத்து வரும் ஏப்ரல் 9ம் தேதி திருக்கல்யாண வைபவமும், ஏப்ரல் 10ம் தேதி மஹா திருத்தேரோட்டமும் நடைபெறுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்