ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே P. புதுப்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெருமாள் திருவராதனம், மஹா சங்கல்பம், விஷ்வக்ஸேனர் திருவராதனம், சுத்த புண்யாகவாசனம், கும்ப ஸ்தாபனம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி