விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபமா பேசுகையில், திமுகவிடம் ஒரு சிறந்த வாஷிங் மெஷின் இருப்பதாகவும், யார் ஊழல் செய்துவிட்டு திமுகவில் இணைந்தாலும் அவர்கள் தூய்மையானவர்கள் என பட்டம் சூட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். ஆட்சி பறிபோகி விடும் என்ற பயத்தில் திமுகவில் யார் சென்றாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், வெயில் காலம் வந்துவிட்டதால் சூரியனை தூக்கி எறியும் நேரமும் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார். திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின், செந்தில் பாலாஜி பற்றி சொல்லாத குற்றச்சாட்டே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.