பிப்ரவரி 7ஆம் தேதி கல்குறிச்சி கலைஞர் திடல் அரங்கில் திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென்மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.