ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள்2ஆவதுநாளாக உண்ணாவிரதப்போராட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம், பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைத்தல், ஊதியத்தை வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்குதல், ஈட்டிய விடுப்பு, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி