விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அச்சம்பட்டியைச் சேர்ந்த அழகு பாண்டி (33) என்பவர், கடந்த 24 ஆம் தேதி பைக் திருட்டு வழக்கு தொடர்பாக காரியாபட்டி போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, தனக்கு பைக் திருட்டுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியும், போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் குருணை மருந்து குடித்து உயிரிழந்தார். பின்னர் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் கல் வீசியதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.