விருதுநகர்: பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.06.2025-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 

இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். வாடகை வீட்டில் வசித்துவரும் புதிய குடும்ப அட்டை கோரும் விண்ணப்பதாரர்கள் அல்லது தனிச் சொத்துவரி ரசீது ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு ஆவணங்களை இணைத்து இணையவழியில் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். 

AAY மற்றும் PHH மின்னணு குடும்ப அட்டைதாரர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கைவிரல் ரேகை பதிவு செய்துகொள்ளலாம். மின்னணு குடும்ப அட்டையில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

எனவே, பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமை தோறும் இம்முகாம் நடைபெறும். அதனை பயன்படுத்திக்கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி