கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள வைத்திலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில், திருச்சுழி ஜீனியஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மாரியம்மன் விளையாட்டு மன்றம் இணைந்து நடத்திய தென் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று நிறைவடைந்தது. கடந்த 18ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 19 அணிகள் பங்கேற்றன. ஒரு வார காலமாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றதுடன், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி