விருதுநகர்: மோதலில் படுகாயம் அடைந்த ஒருவர்..போலீஸ் விசாரணை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பண்ணை மூன்றடைப்பு பகுதியைச் சார்ந்தவர் மாயக்கண்ணன் (28). இவரும் அதே பகுதியைச் சார்ந்த மருதுபாண்டி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மருதுபாண்டி மாயக்கண்ணனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதில் மாயக்கண்ணன் காயம் அடைந்த நிலையில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த மாயக்கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி