இந்த பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா அவர்கள் அரசியல் கொடுத்தும் அரசியல் சார்ந்த புரிதல் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் தங்களது கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை என்றும் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் கூறினார்கள். உடனடியாக இந்த பிரச்சனையை காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டுசென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க தீர்வு காணப்படும் என்று உறுதிமொழி அளித்தார். இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேகதாது அணைக்கு எதிராக தமிழக விவசாயிகள் முற்றுகை போராட்டம்