பேருந்து வசதி கோரி மனு

விருதுநகர் மாவட்டம், ஆலடிப்பட்டி ஊராட்சி, கீழக்குருணை குளம் கிராம மக்கள், பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் மாணவ மாணவியர் பாதுகாப்பிற்காக மாலை நேர பேருந்து வசதி கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி நரிக்குடி ஒன்றிய செயலாளர் தோழர் செல்வம் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழக்குருணை குளம் கிளைச் செயலாளர் தோழர் தங்கவேல், துணை செயலாளர் தோழர் முருகன், பொருளாளர் தோழர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் சரத்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி