விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்தவர் பிரபு வயது 40. இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் தமிழ்ப்பாடி கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது முருகன் என்பவர் ஓட்டிவந்த லாரி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து பிரபு ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பிரபு காயமடைந்த நிலையில் விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பிரபுவின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.