இச்சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராஜேந்திரனுக்கு திருமணம் ஆகி 3 நாட்களில் அவரது மனைவி பிரிந்து சென்று விவாகரத்து ஆன நிலையில் இரண்டு ஆண்டுகளாக இதே ஊரைச் சேர்ந்த மகாலட்சுமி தனது கணவரை இழந்த நிலையில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜேந்திரனும், மகாலட்சுமியும் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மகாலட்சுமி மகன் பிரபாகரன் (19) ராஜேந்திரனை பல முறை கண்டித்துள்ளார்.
கேட்காமல் மீண்டும் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த பிரபாகரன் மற்றும் அவரது பள்ளி நண்பர் மல்லாங்கிணறு வி.வி.வி. நகரைச் சேர்ந்த ராஜா (19) என்பவரும் சேர்ந்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டனர். போலீசார் விசாரணையில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.