விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வரிசையூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தொழில்துறை வல்லுநர் பிரிவு சார்பாக 'மோடி பொங்கல் விழா' வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில், கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டுரங்கன் கலந்து கொண்டு, 250க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். விழாவில் பெண்கள் குலவையிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் தனபாலன் செய்திருந்தார். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.