வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பணி நிறைவு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார். தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் விருதுநகர் மாவட்ட பொருளாளரும், வட்டார சுகாதார மேற்பார்வையாளருமான துறைசாமி என்பவரின் பணி ஓய்வு விழா பண்டிதர் கமலம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கலந்துகொண்டு, பணி நிறைவு பெற்ற வட்டார சுகாதார மேற்பார்வையாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.